states

img

தடுப்பூசியை கொள்முதல் செய்துதர மத்திய அரசை வலியுறுத்துவோம்.. பினராயி விஜயன் கடிதத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி பதில்.....

விஜயவாடா:
எதிர்க்கட்சிகள் ஆளும் 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், கடந்த வாரம் கடிதம் ஒன்றை எழுதி னார்.

மாநில அரசுகள், கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் விட்டாலும், பைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் இந்திய அரசுக்கு மட்டுமேதடுப்பூசி தருவோம்; மாநிலங்களுக்கு தரமாட்டோம் என்று கூறி விட்ட நிலையில், மத்திய அரசே மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசியைக்  கொள்முதல் செய்து தர வேண்டும் என்றும், இந்த கோரிக்கையை அனைத்து மாநில அரசுகளும் இணைந்து எழுப்ப வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும்,  கொரோனா தடுப்பூசிக் கொள்முதல் விவகாரத்தில் மாநிலங்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். அவரும், தடுப்பூசிகளை மத்தியஅரசே கொள்முதல் செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியிருந்த கடிதத்திற்கு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதில் கடிதம் எழுதியுள்ளார்.அதில், ‘ஆந்திர அரசும் தடுப்பூசிகளுக்கு சர்வதேச டெண்டர் விடுத்தது. ஆனால், நீங்கள் சொன்னதுபோலவே எங்களது டெண்டருக்கும் யாரும் பதில் தரவில்லை. எனவே, மத்திய அரசுதான் தடுப்பூசிகளை வாங்கித் தரவேண்டும். மாநில அரசுகள் இதில் ஒன்றாக சேர வேண்டும். மாநில அரசுகள் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம்’ என்று கூறியுள்ளார்.

;